குன்னூர் கருமாரியம்மன் கோவிலில் திருக்கரக உற்சவம்
ADDED :147 days ago
குன்னூர்: குன்னூர் வெலிங்டன், சின்ன வண்டிச்சோலை, தேவி கருமாரியம்மன் கோவிலில், 122வது ஆண்டு திருவிழா விமரிசையாக நடந்தது. நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன், சின்ன வண்டிச்சோலை தேவி கருமாரியம்மன் கோவிலில், 122 வது ஆண்டு திருவிழா கடந்த 7ல் மகா கணபதி ஹோமம் , கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, காப்பு கட்டுதல், தேர் பவனி, திருக்கரக ஊர்வலம், பூ குண்டம் திருவிழா நடந்தது. விரதமிருந்த சிறுமியர் அம்மன் திருக்கரகம் ஏந்தி வந்தனர். இன்று மஞ்சள் நீராடல், மறுபூஜை, புஷ்ப, ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர், விழா குழுவினர் மற்றும் சின்ன வண்டிச்சோலை, மலையப்பன் காட்டேஜ், கூர்கா கேம்ப், பேரக்ஸ் டைரி பார்ம், எம்.இ.எஸ்., குடியிருப்பு, பேரட்டி ஊர் பொது மக்கள் செய்தனர்.