உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிகேசவ பெருமாள் கோவிலை சீரமைக்க பக்தர்கள் வேண்டுகோள்

ஆதிகேசவ பெருமாள் கோவிலை சீரமைக்க பக்தர்கள் வேண்டுகோள்

திருவாலங்காடு: ராமஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பூண்டி ஒன்றியம், ராமஞ்சேரி கிராமம் நடுத்தெருவில் அமைந்துள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில், 1,700 ஆண்டுகள் பழமையானது.

இந்த கோவிலை பற்றிய செப்பேடுகள் மற்றும் கல்வெட்டில், ‘ராமச்சந்திரநல்லுார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் இந்த கோவில், மரக்கன்றுகள் வளர்ந்து சிதிலமடைந்து வருகிறது.

சுவர்களுக்குள் புகுந்துள்ள ஆலமரத்தின் வேர்களால், பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், ஆலமர வேரால் கோவில் சுவரின் உறுதித் தன்மை பாதிக்கப்பட்டு வருகிறது.

பழமையும் பெருமையும் வாய்ந்த ஆதிகேசவ பெருமாள் கோவில், பராமரிப்பு இன்றி பாழடைந்து வருவதால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

கோவில் சிதிலமடைந்து வருவது பற்றி, 30 ஆண்டுகளாக தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்தும், அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாக, பக்தர்கள் குற்றம்சாட்டி வருகின்றப்னர்.

எனவே, பழமைவாய்ந்த இக்கோவிலை சீரமைக்க, அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !