உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டி மண்டபம் திறப்பு விழா

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டி மண்டபம் திறப்பு விழா

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது திருப்பரங்குன்றம், மதுரை, மற்றும் வெளியூர் பெண் பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி ஆறு நாட்கள் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்ளவர்.

விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் தங்கி விரதம் மேற்கொள்ள வசதியாக பூங்கா பஸ் நிறுத்தம் அருகே ரூ. 4:50 கோடியில் கோயில் சார்பில் புதிய சஷ்டி மண்டபம் கட்டப்பட்டது.அந்த சஷ்டி மண்டபத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி மூலம் திறந்து வைத்தார்.‌ மண்டபத்தில் நடந்த விழாவில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச்செல்வம், ராமையா, துணை கமிஷனர் ஞானசேகரன் . கண்காணிப்பாளர்கள் ரஞ்சனி, சத்யசீலன், ஆய்வர் இளவரசி, கவுன்சிலர் சுவிதா, தி.மு.க., வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் பாலாஜி, ரமேஷ், படணியாளர்கள் பங்கேற்றனர். சஷ்டி மண்டப மேடையில் அமைக்கப்பட்டிருந்த சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுரம், சுப்ரமணிய சுவாமி தெய்வானை சிலைகளுக்கு சிறப்பு பூஜை தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !