உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / களை கட்டிய சிவராத்திரி விழா: திருமூர்த்திமலைக்கு திருச்சப்பர ஊர்வலம்

களை கட்டிய சிவராத்திரி விழா: திருமூர்த்திமலைக்கு திருச்சப்பர ஊர்வலம்

உடுமலை:சிவராத்திரியை முன்னிட்டு உடுமலை திருமூர்த்திமலைக்கு திருச்சப்பரம் எடுத்துச்செல்லும் திருவிழா நடந்தது.

சிவனின் முழுமையான அருள்பெற, உறங்காது விழித்திருந்து வழிபடும் சிவராத்திரியை முன்னிட்டு உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஆண்டுதோறும் திருமூர்த்திமலையில் நடைபெறும் சிவராத்திரி பூஜைக்கு, உடுமலை பூலாங்கிணறில் திருச்சப்பரம் எடுத்துச்சென்று வழிபடுவது வழக்கம். அதேபோல், சிவராத்திரியை முன்னிட்டு பூலாங்கிணறில் இருந்து திருமூர்த்திமலைக்கு ஊர்மக்கள் ஒன்றுகூடி திருச்சப்பரம் எடுத்துச்சென்றனர்.  பூலாங்கிணறில் துவங்கிய திருச்சப்பரம் பவனி ஆர்.வேலுார், வாளவாடி, தளி, திருமூர்த்திநகர் வழியாக கோவிலுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. கோவிலுக்கு செல்லும் திருச்சப்பரத்தை சின்னவாளவாடியில் கிராம மக்கள் திருச்சப்பரத்துக்கு மரியாதை செலுத்தி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !