ராமேஸ்வரத்தில் கங்கை நீருடன் பக்தர்கள் ஊர்வலம்
ADDED :2156 days ago
ராமேஸ்வரம்:மாசி மகாசிவராத்திரி விழாவையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கங்கை நீருடன் பக்தர்கள் ஊர்வலம் சென்று தரிசனம் செய்தனர்.
நேற்று மாசி மகாசிவராத்திரியையொட்டி ராமேஸ்வரம் கோயிலில் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ராமேஸ்வரம் பஜ்ரங்கதாஸ் பாபா சேவா டிரஸ்ட் நிர்வாகி சீதாராம் தாஸ் பாபா தலைமையில், பா.ஜ., ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளீதரன், ஏராளமான சாதுக்கள், பக்தர்கள் புனித கங்கை நீர் கலசத்துடன் ராமநாதசுவாமி கோயில் 3ம் பிரகாரத்தில் வலம் வந்தனர். பின் சுவாமிக்கு கங்கை நீரில் கோயில் குருக்கள் அபிேஷகம் செய்ததும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் இரவு முழுவதும் கோயில் நடை திறக்கப்பட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று இரவு 9:30 மணிக்கு அலங்கரித்த வெள்ளி ரதத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வலம் வந்தனர்.