கோட்டைமேடு முனீஸ்வரர் கோயிலில் மாசி களரி விழா
ADDED :2058 days ago
கமுதி:கமுதி அருகே கோட்டைமேடு முனீஸ்வரர் கோயிலில் மாசி களரி விழாவை முன்னிட்டு முகூர்த்த கால் ஊன்றிய நிகழ்ச்சியுடன் பிப்.15 ல் விழா துவங்கியது. நேற்று காலை கோட்டைமேடு, கமுதி மக்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. பொதுமக்கள் பொங்கலிட்டனர்.
இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.ராமநாதபுரம் ஆயுதப்படை டி.எஸ்.பி., வெள்ளத்துரை தலைமை வகித்தார். கமுதி டி.எஸ்.பி., மகேந்திரன், கமுதி ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். பால்குட ஊர்வலத்தை டி.ஐ.ஜி., ரூபேஸ்குமார் மீனா, எஸ்.பி., ராஜராஜன் அன்னதானத்தை துவக்கி வைத்தனர். விஷேச சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அபிஷேகம் நடந்தது.நாராயணபுரம் முன்னாள் ஊராட்சி தலைவர் ராமச்சந்திர பூபதி, கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.