பெரியகுளம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி
ADDED :2058 days ago
பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அர்ச்சகர் கணேசன் செய்திருந்தார்.பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் ராஜேந்திரசோழீஸ்வரர், அறம்வளர்த்த நாயகி, பாலசுப்பிரமணியர் ,கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில் சிவனுக்கு, அபிஷேகம், ஆராதனை நடந்தது. வடகரை தையல்நாயகி உடனுறை வைத்தியநாதர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது