சிவாலயங்களில் பிரதோஷ விழா
ADDED :2352 days ago
திருவாடானை:திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நேற்று பிரதோஷ விழா நடந்தது.நந்தி பகவான் வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேவாரம், திருவாசகம் போன்ற பக்தி பாடல்களை பாடினர். அதனை தொடர்ந்து காளை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. தொண்டி சிதம்பரேஸ்வரர், நம்புதாளை நம்பு ஈஸ்வரர், திருவெற்றியூர் வன்மீக நாதர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர் போன்ற கோயில்களிலும் பிரதோஷ விழா நடந்தது.