திண்டுக்கல் சிவன் கோயில்களில் இரவு பூஜை
ADDED :2060 days ago
திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. திண்டுக்கல் அபிராமியம்மன் கோயிலில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரர், ரயிலடி சித்தி விநாயகர் கோயில், நன்மை தரும் 108 விநாயகர் கோயில், சத்திரம் தெரு செல்வ விநாயகர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.