புராணத்தில் சிவராத்திரி
ADDED :2239 days ago
சிவராத்திரிக்கான காரணங்கள் புராணத்தில் உள்ளன.
* பிரம்மா, மகாவிஷ்ணுவுக்கு எட்டாமல் வானத்திற்கும், பூமிக்குமாக பிரம்மாண்ட வடிவில் சிவன் உயர்ந்த நாள்.
* உமையவளான பார்வதி கண் விழித்து நான்கு ஜாமத்திலும் அபிஷேகம் செய்து சிவனை பூஜித்த நாள்.
* ஒருசமயம் விளையாட்டாக சிவனின் கண்ணை மறைத்தாள் பார்வதி. உலகமே இருண்டது. செய்வதறியமால் தவித்த உயிர்கள் சிவனைச் சரணடைந்த நாள்.
* பாற்கடலில் எழுந்த ஆலகால விஷத்தை சிவன் அருந்தினார். தேவர்கள் அனைவரும் விழித்திருந்த அந்த இரவே சிவராத்திரி.