வேடசந்துாரில் கோயில் திருவிழா
ADDED :2149 days ago
வேடசந்துார் : வேடசந்துார் பாம்பாட்டி தெருவில் உள்ள மதுரை வீரன் சுவாமி கோயிலில் பெரிய கும்பிடு விழா நடந்தது.நானுாறு ஆண்டுகள் பழமையான இக்கோயிலில், விநாயகர் பூஜையுடன் விழா துவங்கியது. பின்னர் குடகனாற்றில் சுவாமி அலங்காரம் செய்து கோயிலுக்கு கொண்டு வருதல், மகா சிவராத்திரியை முன்னிட்டு பயறு வகைகள் படைத்து, அரிவாள் மீது நின்று அருள் வாக்கு சொல்லுதல் உள்ளிட்ட சிறப்பு நிகழ்சிகள் நடந்தன. வேடசந்துார், திண்டுக்கல் சுற்றுவட்டாரத்தினர் திரளானோர் பங்கேற் றனர்.