பெரியபட்டினத்தில் பாரிவேட்டை விழா
ADDED :2047 days ago
பெரியபட்டினம்: பெரியபட்டினத்தில் உள்ள குதிரைமலையான் கருப்பண்ணசாமி கோயிலில் மாசி களரி பாரிவேட்டை திருவிழா நடந்தது. குதிரைமலையான் கருப்பண்ணசாமி, சப்த கன்னிகள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், பன்னீர், திரவியப்பொடிகளால் 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஆடு, சேவல் பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவில் படையல் வைத்து, பாரிவேட்டை நிகழ்ச்சியில் ஏராளமான குலதெய்வ குடிமக்கள், பக்தர்கள் பங்கேற்றனர். பூஜைகளை பூஜகர் ஹரிகரன் செய்தார். கோயில் டிரஸ்டி ஜீவானந்தம் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர். அதிகாலையில் பக்தர்கள் பூக்குழி இறங்கினர். பொங்கலிட்டு, மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.