உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூலவர் விநாயகர் மீது சூரிய ஒளி: பக்தர்கள் பரவசம்

மூலவர் விநாயகர் மீது சூரிய ஒளி: பக்தர்கள் பரவசம்

வீரபாண்டி: மூலவர் விநாயகர் மீது சூரிய ஒளி பட்டதால், திரளானோர் தரிசனம் செய்தனர். ஆட்டையாம்பட்டி, கைலாசம்பாளையம்புதூர், ராஜகணபதி கோவிலில், 2016ல், ராகு, கேது, நவக்கிரக பரிவார சிலைகளை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதிலிருந்து, பிப்., 21 முதல், 25 வரை, காலை, 7:00 முதல், 7:30 மணிக்குள், சூரிய ஒளி, மூலவர் விநாயகர் சிலை மீது விழும் அதிசய நிகழ்வு நடந்து வருகிறது. நடப்பாண்டு, இரு நாள் தாமதமாக, பிப்., 23 காலை, 7:15 முதல், 7:30 வரை, மூலவர் மீது சூரியஒளி விழுந்தது. அப்போது, திரளானோர் தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வு, இன்னும் ஓரிரு நாள் நிகழும் என, பக்தர்கள் தெரிவித்தனர்.உட்பிரகாரத்தில்...: தாரமங்கலம், கைலாசநாதர் கோவிலில், பிப்., 21 முதல், 23 வரை, மாலையில், சூரிய ஒளி, லிங்கம் மீது விழும். ஆனால், இரு நாளாக மேகமூட்டதால், சூரிய ஒளி தென்படவில்லை. மூன்றாம் நாளான நேற்று, திரளான பக்தர்கள், மூலஸ்தனம் முன் குவிந்தனர். மாலை, 5:55 மணிக்கு, சூரிய ஒளி, ராஜகோபுரம் வழியாக, கோவில் உட்பகுதியிலுள்ள உண்டியல் வரை தென்பட்டது. இதனால், பக்தர்கள், ஓம் நமச்சிவாயா கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர். ஆனால், சில நிமிடத்தில், ஒளி மறைந்தது. மூன்றாம் நாளாக நேற்றும், கருவறைக்குள் செல்லவில்லை. பின், தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !