உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் மாசி தெப்ப உற்சவம்

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் மாசி தெப்ப உற்சவம்

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், மாசி தெப்போற்சவம் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், மாசி மாத அமாவாசையை முன்னிட்டு, மூன்று நாள் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

முதல் நாள் தெப்பம், நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக, அன்று மதியம், பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின், மாலை, 6:30 மணிக்கு, ஹிருதாபநாசினி குளத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்பத்திற்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகவர் எழுந்தருளினார். மூன்று முறை பெருமாள் தெப்பத்தில் வலம் வந்தார். நேற்று, இரண்டாவது நாளாக தெப்போற்சவம் நடைபெற்றது. சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தர்கள், குளக்கரையை சுற்றி நின்று பெருமாளை வழிபட்டனர். இன்று, மூன்றாவது நாளாக தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. முன்னதாக, கோவில் வளாகத்தில் கண்ணாடி அறையில் பெருமாளுக்கு திருமஞ்சனம் மதியம், 3:30 மணிக்கு நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !