உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலங்குடி கருப்பர் கோயிலில் திருவிழா துவக்கம்

வேலங்குடி கருப்பர் கோயிலில் திருவிழா துவக்கம்

திருப்புத்துார் : வேலங்குடி கருப்பர் கோயிலில் மாசித்திருவிழா துவங்கியது.
வேலங்குடி கருப்பர் கோயிலில் மாசித் திருவிழா பத்துநாட்கள் நடைபெறும். கடந்த பிப்.,19ல் காப்புக்கட்டுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து அங்காளம்மன் கோயிலிருந்து சிவராத்திரி சிறப்பு பூஜைகள், பாரிவேட்டை நடந்தது. சுற்று வட்டாரக் கிராமத்தினர் கருப்பரை தரிசித்து செல்கின்றனர். இன்று முதல் திருவிழா துவங்குகிறது. குழந்தை வரம் வேண்டுபவர்கள் கரும்புத் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் நிறைவேற்றுவர். அலகுகுத்தி சிறு தேர், காவடி, பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பிப்.,28ல் மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !