சென்னை கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ஹயக்ரீவ யாகம்
ADDED :2128 days ago
சென்னை: மனப்பாக்கத்தில் உள்ள, கனகவல்லி தாயார் சமேத கரியமாணிக்க பெருமாள் கோவிலில், லட்சுமி ஹயக்ரீவ மஹா யாகம் ஒவ்வொரு ஆண்டு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
அதன்படி, கடந்த பிப்ரவரி 23ம் தேதி, 6ம் ஆண்டு மஹா யாகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்வுகளில், மாணவ மாணவியர்கள் முழு மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேண்டி, இந்த யாகம் நடத்தப்பட்டது. இதனால், இதில், நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு, பிரார்த்தனை செய்தனர். யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட பேனா, புத்தகம் அடங்கிய ‘கிட்’, மாணவ மாணவியருக்கு, வழங்கப்பட்டது. மேலும், சர்க்கரைப் பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்கள் விநியோகிக்கப்பட்டன.