என்றும் செல்வ செழிப்புடன் இருக்க ..
★ வீட்டில் மல்லிகை செடி, வில்வம், துளசி வளர்க்க பெரும் செல்வம் ஏற்படும்.
★ வெறும் தரையில் அமர்ந்து சாப்பிடக்கூடாது. வடக்கு பார்த்து சாப்பிடக்கூடாது.
★ நெல்லிக்காய், அகத்திக்கீரை மாலை ஐந்து மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது. நகம், முடி வெட்டக்கூடாது.
★ வியாழன், வெள்ளி, சனி, முடி வெட்டுதல் நகம் வெட்டுதல் கூடாது.
★ ஏகாதசி நாள் அன்று விரதம் இருந்தால் செல்வம் பெருகும். திங்கள் கிழமை காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிவரை தண்ணீர் முதற்கொண்டு ஏதும் சாப்பிடக்கூடாது.
★ மாலை ஐந்து மணிக்கு மேல் தயிர் சாப்பிடக்கூடாது.
★சனிக்கிழமை காலை ஆறுமணி முதல் ஏழு மணிக்குள் சுத்தமான நல்லெண்ணெயை ஆண்கள் இடது காலிலும் பெண்கள் வலது காலிலும் தடவினால் பணம் வரவு இருக்கும்.
★ வியாபாரம் தொழில் செய்யும் இடத்தில் ஐந்து முக ருத்ராட்சம் வைத்து பூஜித்தால் வியாபாரம் தொழில் அமோகமாக நடக்கும்.
★ தினமும் மல்லிகை பூவை பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பணம் சேரும்.
★ வீட்டின் வாசற்படியில் நற்பவி என்று எழுதிவைத்தால் நன்மைகள் வந்து சேரும்.
★ மயில் தோகையை வீட்டில் வைக்க பற்பல நன்மைகள் உண்டாகும்.
★ வீட்டில் பப்பாளி மரம், கறிவேப்பிலை மரம் வளர்க்க கூடாது, பப்பாளி மரம் பெண்களையும், கறிவேப்பிலை ஆண்களையும் பாதிப்படைய செய்யும்.
★ முட்கள் உள்ள செடியை வீட்டில் வளர்த்தால் பணம் தங்காது.