உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / களைகட்டிய வேட்டைக்கொருமகன் கோவில் திருவிழா

களைகட்டிய வேட்டைக்கொருமகன் கோவில் திருவிழா

பந்தலூர்: பந்தலூர் அருகே தேவாலா வேட்டைக்கொருமகன் கோவில் திருவிழாவில் தேர் ஊர்வலம் நடைபெற்றது.

பந்தலூர் அருகே தேவாலா பகுதியில் பிரசித்தி பெற்ற வேட்டைக்கொருமகன் கோவில் திருவிழாவில் முதல்நாள் நிகழ்ச்சியில் நடைதிறப்பு, நிர்மால்ய தரிசனம், மலர் நிவேத்தியம், மகா கணபதி ஹோமத்துடன் கொடி ஏற்றப்பட்டது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிளக்கு பூஜை, பஜனை நடந்தது. மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் பல்வேறு பூஜைகள் மற்றும் செண்டை மேளத்துடன் ஊர்வலம், மஞ்சள் நீராட்டம், கனல் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் நடை திறப்பு மற்றும் சிறப்பு பூஜைகள், அன்னதானம், இரவு 7 மணிக்கு சிங்காரி மேளம், நாதஸ்வரம், பூக் காவடி ஆட்டம், காரமடை மேளம், பழங்குடியினர் மேல வாத்தியம், தாலப்பொலி ஊர்வலம் மற்றும் தேர் ஊர்வலம் இடம்பெற்றது. திருவிழா மற்றும் தேர் ஊர்வலத்தில் திரளான மக்கள் பங்கேற்று, விழா களைகட்டியது. விழாவிற்கான பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகளை கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !