வீரக்குடி முருகைய்யனார் கோயில் திருவிழா: சுவாமி வீதி உலா
ADDED :2100 days ago
நரிக்குடி: நரிக்குடி வீரக்குடியில் ஆயிரத்து 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகைய்யனார் கோயில் திருவிழா நடந்தது. தினமும் 3 கால பூஜைகள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடப்பது வழக்கம். இந்நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு நடந்த விழாவில், சர்வ அலங்காரத்துடன், பூச்சக்கர குடைகள், மகிட தோரணம், சென்டை மேளதாளத்துடன் கரகம் எடுத்து முருகைய்யனார் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பொங்கலிட்டு, நேர்த்திக் கடன் செலுத்தி, வழிபாடு செய்தனர். நேற்று முன்தினம் அர்த்தசாம பூஜை நடந்தது. மதுரை, தேனி, திண்டுக்கல், சென்னை, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர்.