அனுமனுக்கு 1 லட்சம் துளசியால் லட்சார்ச்சனை
ADDED :2062 days ago
ஓசூர்: ஓசூர், நேதாஜி சாலையில் உள்ள சங்கர நாராயணசாமி கோவிலில், உலக நன்மைக்காகவும், மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டியும், சந்தனத்தால் வடிவமைக்கப்பட்ட அனுமனுக்கு, ஒரு லட்சம் துளசி இலைகளை கொண்டு, லட்சார்ச்சனை செய்யப்பட்டது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், துளசி பூஜை செய்தனர். தொடர்ந்து, அனுமாருக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. ரோஜா மலர்களை கொண்டு அபிஷேகமும் நடந்தது. வேத விற்பன்னர்கள் மந்திரங்களை முழங்கி, பூஜைகள் செய்தனர். பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.