உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

காரைக்கால் நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

காரைக்கால்: காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் நேற்று பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது.

காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள கைலாசநாதர் சுவாமி ஸ்ரீ நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கடந்த 27ம் தேதி முதல் வரும் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. தினம் நித்திய கல்யாண பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் வீதியுலா நடைபெறும். நேற்று முதல் நாள் விழாவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக மூலவர் நித்யகல்யாண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.பின் காலை 9.45மணிக்கு மிக விமர்சியாக கொடியேற்றம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் வாரியத்தலைவர் கேசவன். செயலாளர் பக்கிரிசாமி. துணைத் தலைவர் ஆறுமுகம்.பொருளாளர் ரஞ்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். மேலும் நித்திய கல்யாண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நித்திய கல்யாண பெருமாள் பக்தஜன சபாவினர் சிறப்பாக செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !