உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவில் திருக்கல்யாண விழா

ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவில் திருக்கல்யாண விழா

சோமனூர்: மாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில், வரும், 11ம் தேதி திருக்கல்யாண விழா நடக்கிறது. சோமனூர் அடுத்த ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. கடந்த 25ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் திருக்கல்யாண உற்சவ விழா துவங்கியது. நாளை கம்பம் நடும் விழா நடக்கிறது. தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகளும், பூவோடு எடுத்து ஆடுதலும் நடக்கிறது. வரும், 9 ம் தேதி விநாயகர் மற்றும் கருப்பராயன் பொங்கல் வைத்தலும், 11 ம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாணமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !