குமரகோட்டத்தில் வரும் 5ல் தவன உற்சவம்
ADDED :2046 days ago
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம், குமரகோட்டத்தில், மாசி தவன உற்சவம், வரும், 5ம் தேதி துவங்குகிறது.காஞ்சிபுரம், குமரகோட்டம், சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆண்டுதோறும், மாசி மகத்தையொட்டி மூன்று நாட்கள் தவன உற்சவம் நடைபெறும். அதன்படி, இந்தாண்டு உற்சவம், வரும், 5ம் தேதி துவங்குகிறது. உற்சவத்தையொட்டி, தினமும், இரவு, 7:00 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன், முருகப் பெருமான் வீதியுலா செல்கிறார்.பின், கந்தபுராண மண்டபத்தில், நறுமணம் கமழும் குளிர்ச்சி நிறைந்த, தவன அலங்கார பந்தலில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நான்காம் நாளான, வரும், 8ம் தேதி மாசிமகம் உற்சவம் நடைபெறுகிறது.