சிங்கீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி பிரம்மோத்சவம் துவக்கம்
ADDED :7 hours ago
மப்பேடு: சிங்கீஸ்வரர் கோலிலில், மாசி சிவராத்திரி பிரம்மோத்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு ஊராட்சியில் உள்ள புஷ்பகுஜாம்பாள் சமேத சிங்கீஸ்வரர் கோவிலில், 17ம் ஆண்டு மாசி சிவராத்திரி பிரம்மோத்சவ திருவிழா, இன்று காலை 10:10 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக, நேற்று காலை விநாயகர் உற்சவம் நடந்தது. தினமும் காலை சந்திரசேகர் மற்றும் மாலை சோமாஸ்கந்தர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். வரும் 17ம் தேதி காலை 9:00 – 9:30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுமென, ஹிந்து சமய அறநிலைய துறையினர் தெரிவித்தனர்.