மாமல்லபுரம் கோவிலில் வெளிநாட்டவர் பக்தி ஆர்வம்
ADDED :2047 days ago
மாமல்லபுரம்: வெளிநாட்டுப் பயணியர், மாமல்லபுரம் கோவிலில் வழிபட, ஆர்வம் காட்டுகின்றனர். மாமல்லபுரம், பல்லவர் சிற்பங்கள் காண, ஆகஸ்ட் - மார்ச் மாதங்களில், வெளிநாட்டுப் பயணியர், சுற்றுலா வருகின்றனர்.இந்து மதம், தியானம், யோகா என, இந்திய பாரம்பரிய கலாசாரம், அவர்களை கவர்கின்றன. சுற்றுலா வழிகாட்டிகள், அவர்களிடம், இவ்வூர், சைவ, வைணவ கோவில்கள் பற்றி, அவர்களிடம் விளக்குகின்றனர். இதனால் கவரப்படும் அவர்கள், சிற்ப பகுதி அருகாமை, மல்லிகேஸ்வரர், ஸ்தலசயன பெருமாள் கோவில்களில், ஆர்வத்துடன் வழிபட்டு, ஆன்மிகம் அறிகின்றனர். நேற்று முன்தினம், சுற்றுலா வந்த, கஜகஸ்தான் நாட்டுப் பயணியர், மல்லிகேஸ்வரர் கோவிலில் வழிபட்டனர்.