உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியாண்டிச்சியம்மன் கோவில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு

பெரியாண்டிச்சியம்மன் கோவில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு

பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், கொட்டவாடி பெரியாண்டிச்சியம்மன் கோவிலில், நேற்று ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மயான பண்டிகையையொட்டி, இரண்டாவது நாளான நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பெரியாண்டிச்சியம்மன் கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்தனர். பின், தேங்காய், பழம், புடவை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களுடன் மூலவருக்கு படையலிட்டு வழிபட்டனர். மேலும், ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !