சக்தி மாரியம்மனுக்கு பால்குட ஊர்வலம்
ADDED :7 hours ago
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகரில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலில், ஆண்டு விழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடந்தது.
காலை 10:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பெண்கள் பால்குடம் எடுத்தனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் உள்ள வழியாக சென்று கோவிலை அடைந்தது. அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பகல் 1:30 மணிக்கு அம்மனுக்கு சோடசோபச்சார தீபாராதனை நடந்தது.
மாலை 6:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 8:00 மணிக்கு அம்மன் வீதி உலா நடந்தது. கோவில் நிர்வாகி சக்திவேல், தொழிலதிபர்கள் தியாகராஜன், செல்வராஜ், கண்ணப்பன், சாந்திபால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.