ஒரே ஸ்லோகத்தில் சிவனின் 1008 நாமாக்கள்!
ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோ ரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே
இந்த ஸ்லோகத்தைப் படித்தால் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை முழுக்கப் படித்த பலன் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். இதை போல் சிவஸஹஸ்ரநாமத்திற்கும் ஒரு எளிய வழியுண்டு. சிவபெருமானால் உபதேசிக்கபட்ட இந்ந அதியற்புதமான எட்டு நாமக்களை சொல்வதால் 1008 திருநாமங்களை சொன்ன பலன் கிட்டும்
அது..
ஷிவோ மகேஷ்வரச்சைவ ருத்ரோ
விஷ்ணு பிதமஹா ஸம்ஸாரவைத்ய
ஸர்வேஷ பரமாத்மா ஸதாசிவ ll
பொருள்: சிவ : அனைத்து வித மங்களங்களையும் அளிப்பவன்.
மகேஷ்வர : முடிவில்லா மஹா அண்டத்தை உடையவன்.
ருத்ர : ருத்ரன் (சிவபெருமானின் வடிவங்களிள் ஒன்று).
விஷ்ணு : எங்கும் நிறைந்து இருப்பவர்.
பிதமஹா : ப்ரஹம்மனின் வடிவாக இருப்பவரர்.
ஸம்ஸாரவைத்ய : ஸம்ஸாரம் எனும் கொடிய நிலையிலிருந்து காப்பாற்றும் ஒரே வைத்தியர்.
ஸர்வேஷ பரமாத்மா : அனைத்து கடவுள்களினுள் இருக்கும் பரம்த்மா.
ஸதாசிவ : தென்னகச் சிவநெறியின் பரம்பொருளாகப் போற்றப்படுகின்ற சிவனின் வடிவம்.
இந்த எட்டு திருநாமக்களை ஒருவன் மூன்று முறை சொல்வதால் சிவபெருமானின் 1008 திருநாமங்களை சொன்ன பலன் கிட்டும் என சிவபெருமானே சனகாதி முனிவர்களுக்கு சிவ மஹா புராணத்தில் உபதேசித்துள்ளார். இன்றைய அவசர சூழ்நிலையில் 1008 நாமக்களை பாராயணம் செய்ய நேரம் இல்லாத சந்தர்பங்களில் இந்த எட்டு புனித நாமக்களை சொல்லி சிவஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்த பலனை பெறலாம்!.