உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தசாவதாரமும் மனித வாழ்வும்!

தசாவதாரமும் மனித வாழ்வும்!

1. மச்ச அவதாரம் –   தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும் நிலை
2. கூர்ம அவதாரம் –   மூன்று மாத குழந்தை தன் தலையை ஆமை போல் துாக்கி பார்க்கும் நிலை.
3. வராக அவதாரம் –  ஆறாம் மாதத்தில் குழந்தை தவழ்ந்து நான்கு கால்களில் நிற்பது.
4. நரசிம்ம அவதாரம் – எட்டு மாத குழந்தை உட்கார்ந்து கையில் கிடைத்ததை கிழிப்பது நரசிம்மம்.
5. வாமன அவதாரம் – ஒரு வயதில் அடி மேல் அடி வைத்து நடப்பது வாமனன்.
6. பரசுராம அவதாரம் –  வளரும் காலத்தில் பெற்றோருக்கு கடமையாற்றுவது.
7. ராம அவதாரம் – திருமணம் முடிந்து ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்வதைக் குறிக்கும்.
8. பலராம அவதாரம் – உடன் பிறந்தோர், சுற்றத்தார் என  கூடி வாழ்வதை விளக்கும்.
9. கிருஷ்ண அவதாரம் – முதுமையில் தான் பெற்ற ஞானத்தை அடுத்த சந்ததிக்கு உபதேசிப்பதை குறிக்கும்.
10. கல்கி அவதாரம் –  கடவுளுடன் ஒன்றி அறிவின் முழுமையான முக்தியை பெறுவதாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !