உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ‘ஆத்திசூடி’ சுவாமி

‘ஆத்திசூடி’ சுவாமி

ஆத்திசூடி என்பது அவ்வையார் பாடிய பாடல் என்பது தெரியும். ஆனால் கடவுளின் நாமம் என்பது தெரியுமா?  ‘ஆத்திசூடி’  என்பது சிவனைக் குறிக்கும். குழந்தைகளுக்கு நீதி உபதேசம் செய்த அவ்வையார், முதலில் சிவனின் திருநாமத்தில் ஒன்றை சொல்ல விரும்பியதால் இப்பெயரை பாட்டின் தலைப்பாக வைத்தார். ‘ஆத்தி’ என்னும் இளம் மஞ்சள்நிற மலராகும்.  பிறை வடிவில் உள்ள இதனை தலையில் சூடியிருப்பார் சிவன்.  ‘ஆத்தி மலர் சூடிய சிவன்’ என இதனைச் சொல்லலாம்.  நுாலைத் தொடங்கும் முன் கடவுள் வாழ்த்து போல இந்த பெயரை வைத்துள்ளார் தமிழ்ப்பாட்டி. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !