நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
ADDED :332 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் இன்று நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் மூலவர் மற்றும் உற்சவர், ஊஞ்சல் உற்சவத்தில் அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் ஐயப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.