உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வண்ணார்பேட்டை இஸ்கான் கோயிலில் 5ம் தேதி நரசிம்ம ஜெயந்தி விழா!

வண்ணார்பேட்டை இஸ்கான் கோயிலில் 5ம் தேதி நரசிம்ம ஜெயந்தி விழா!

திருநெல்வேலி : வண்ணார்பேட்டை இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் 5ம் தேதி நரசிம்ம ஜெயந்தி விழா நடக்கிறது. பகவான் கிருஷ்ணரின் எண்ணற்ற அவதாரங்களில் நரசிம்ம அவதாரம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த அவதாரத்தில் கிருஷ்ணர், தனது பக்தன் பிரகலாதனுக்காக அவதரித்தார். இந்த நாளில் சாய்ங்காலம் வரை விரதம் இருந்து நரசிம்மரை வழிபடுவது சிறப்பு. வண்ணார்பேட்டை இஸ்கான் கோயிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு 5ம் தேதி மாலை ஸ்ரீ லெட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. இதில் ஹரிநாம யக்யம், மகா அபிஷேகம், நரசிம்ம பிரார்த்தனை நடக்கிறது. மகா அபிஷேகத்திற்காக 9 கலசங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு பூஜிக்கப்படள்ளது. இதுதவிர பால், பழம் உள்ளிட்ட பஞ்சராத்திரிக முறைப்படியான திருமஞ்சனமும் நடைபெறவுள்ளது. அபிஷேகத்தின் போது பகவானின் ஹரி நாம பஜனையும், நரசிம்ம அவதார மகிமையும் இடம்பெறும். ஏற்பாடுகளை இஸ்கான் பக்தர்கள் குழு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !