125 அடி உயர கோபுரத்தில் புத்தர் அஸ்தி வைக்கும் நிகழ்வு
ADDED :2044 days ago
தென்காசி: சங்கரன்கோவில் புத்தர் ஆலயத்தில் அமைக்கப்பட்டுவரும் கோபுரத்தில் புத்தரின் அஸ்தியை வைக்கும் நிகழ்வு நேற்று நடந்தது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரிருப்பு கிராமத்தில் 2001ல் புத்தர் ஆலயம் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடக்கிறது. அங்கு தென்னிந்தியாவிலேயே உயரமான 125 அடி உயர கோபுரம் அமைக்கப்பட்டுவருகிறது. கோபுரத்தில் புத்தரின் அஸ்தி வைக்கும் நிகழ்வுநடந்தது. ஜப்பானில் இருந்து கொண்டுவரப்பட்ட அஸ்தி பெட்டி அங்கு வைக்கப்பட்டது. இந்தியாவிற்கான மங்கோலிய துாதர் கன்பொல்டு தலைமை வகித்தார். விழாவில் தென்கொரியா, ஜப்பான், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 80க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள், பிக்குனிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை புத்தர் ஆலய துறவி நிப்பான்சான் மயோஹொஜி செய்திருந்தார்.