உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் வீடுகளில் முருகன் கொடி

திருப்பரங்குன்றம் வீடுகளில் முருகன் கொடி

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி திருப்பரங்குன்றத்தில் பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக பொதுமக்கள் தன்னெழுச்சியாக வீடுகளில் முருகன், சேவல் படத்துடன் மஞ்சள் கொடி கட்டியும், வாசலில் விளக்கேற்றியும் வருகின்றனர். நேற்று மலை அடிவாரத்திலுள்ள பழனியாண்டவர் கோயில் தெரு மக்கள், இஸ்லாமியர்களுக்கு சந்தனக்கூடு விழாவிற்கு மலையில் கொடியேற்ற அனுமதிக்கிறீர்கள். ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி எங்களுக்கு தீப தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கிறீர்கள் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டு இரவில் விடுவிக்கப்பட்டனர்.  அந்த தெருவிலுள்ள அனைத்து வீடுகளிலும் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ‌முருகன், சேவல் படம் பொறித்த மஞ்சள் கொடிகளை பெண்கள் கட்டியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !