உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி மகா பிரதோஷம்

கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி மகா பிரதோஷம்

கடலுார் ; கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.


கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் சனி மகா பிரதோஷத்தையொட்டி காலை பெரியநாயகி அம்மன் சமேத பாடலீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. மாலை மகா மண்டபம் எதிரில் அமைந்துள்ள நந்தி பகவானுக்கு மங்கள திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நந்தி பகவான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதே போன்று, மாவட்டத்தில் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர், பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில், மகா பிரதோஷத்தையொட்டி, நந்த பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !