விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
ADDED :2122 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மாத பிரம்மோற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் தேர்களை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பிரம்மோற்சவம், கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினசரி சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவில் மார்.,4ல் வெள்ளி ரிஷப வாகனத்தில் வி ருத்தகிரீஸ்வரர் எழுந்தருளி, விபசித்து முனிவருக்கு காட்சியளிக்கும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று 7ம்தேதி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பிரம்மோற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் தேர்களை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். 8ம் தேதி மாசி மக தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது.