உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாலிங்கேஸ்வரர் கோவிலில் மாசி வளர்பிறை பிரதோஷம்

மகாலிங்கேஸ்வரர் கோவிலில் மாசி வளர்பிறை பிரதோஷம்

குன்னுார்:குன்னுார் உபதலை ஊராட்சி, கேத்தொரை அருகே, கொதங்கட்டி கிராமத்தில் உள்ள மகாலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று முன் தினம் மாசி மாத வளர்பிறை பிரதோஷ பூஜை நடந்தது.விழாவையொட்டி, நந்தி மற்றும் மகாலிங்கேஸ்வரருக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தன. பால், பன்னீர், மஞ்சள், இளநீர், எலுமிச்சை, சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது .இதில், நந்திக்கு, பொதுமக்களே பாலாபிஷேகம் செய்து வழிபாடுகளை நடத்தினர். தொடர்ந்து பஜனை, அன்னதானம் இடம் பெற்றது. விழாவில், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !