பால் சொரிந்த விநாயகர் கோவில் வேப்பமரம்: வழிபட்ட பக்தர்கள்
பரமக்குடி; பரமக்குடி நகராட்சி வளாகத்தில் இருக்கும் வேப்ப மரத்தில் இருந்து பால் சொரிந்த நிலையில் அங்கு வந்தவர்கள் வழிபட்டு சென்றனர்.
பரமக்குடி நகராட்சியில் நகர் நல விநாயகர் சன்னதி உள்ளது. இதன் எதிரில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வேப்பமரம் வளர்ந்து நிற்கிறது. தொடர்ந்து விநாயகருக்கு பூஜை செய்யப்படும் நிலையில், அபிஷேக நீர் வேப்பமரத்திற்கு ஊற்றப்பட்டு வருகிறது. இந்த தெய்வீகத் தன்மை கொண்ட மரத்திலிருந்து சில நாட்களாக பால் வடிந்து வருகிறது. இன்று காலை மரத்தில் அதிகமான பால் சுரந்த நிலையில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் அங்கு வந்தவர்கள் பார்வையிட்டு வழிபட்டனர். மேலும் சிலர் அந்தப் பாலை அருந்தி சென்றனர். சுற்றுவட்ட பகுதிகளில் ஏராளமான வேப்ப மரங்கள் இருந்தும் இது போன்ற குறிப்பிட்ட மரத்தில் மட்டுமே பால் வடியும் என்பதால், தெய்வீகத் தன்மை கொண்ட மரத்தை பலரும் தங்கள் மொபைல் போனில் படம் எடுத்து சென்றனர்.