காளியம்மன் கோவிலில் தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED :2057 days ago
குளித்தலை: குளித்தலை, காளியம்மன் கோவில், மல்லாண்டவர் கோவில் திருப்பணிக்காக பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர். குளித்தலை, மலைப்பன் நகரில் புதிதாக காளியம்மன் கோவில் மற்றும் மல்லாண்டவர் கோவில் கட்டுவதற்காக கிராம மக்கள் முடிவு செய்தனர். நேற்று காலை, 10:00 மணியளவில் பெரியபாலம் பரிசல் துறை காவிரியாற்றில், கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து, நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். தீர்த்தக்குடம் தண்ணீரை கோவிலில் ஊற்றி சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது.