கைலாசநாதர் கோயிலில் சனிப்பிரதோஷ விழா
ADDED :2057 days ago
நத்தம்:நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு நடந்தது.
உட்பிரகார மண்டபத்தில் அமைந்துள்ள நந்தி சிலைக்கு பால், பன்னீர், இளநீர், தயிர், மஞ்சள்நீர், விபூதி, தேன், புஷ்பம், திருமஞ்சணம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி புறப்பாட்டை தொடர்ந்து கைலாச நாதருக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.
இதேபோல சாணார்பட்டி அருகே ஆவிளிப்பட்டி ஆதிசுயம்பீஸ்வரர் கோயிலில் 16 வகை அபிஷேகம் நடந்தது. காப்பரிசி, அகத்தி கீரை உள்ளிட்ட பிரசாதங்கள் படைத்து பசுவிற்கு வழங்கப்பட்டது. திரளானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.