தேசபக்தி அவசியம்: சிவயோகானந்தா பேச்சு
ADDED :2150 days ago
மதுரை: ‘‘குழந்தைகள் நற்பண்புகளை வளர்த்து கொண்டு தேசபக்தியுடன் இருக்க வேண்டும்,’’ என, மதுரையில் சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா தெரிவித்தார். கோச்சடை தாம்பிராஸ் கிளை, சின்மயா மிஷன் சார்பில் மாணவர்கள் கல்வி ஞானம், தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற தட்சிணாமூர்த்தி, ஹயக்ரீவர் சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. இதில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. சுவாமி சிவயோகானந்தா பேசுகையில், ‘‘குழந்தைகளுக்கு கல்வி அறிவைத்தவிர, விடா முயற்சி, நித்ய பிரார்த்தனையும் மிக முக்கியம். குழந்தைகள் நற்பண்புகளை வளர்த்து கொண்டு தேசபக்தியுடன் இருக்க வேண்டும்,’’ என்றார். தாம்பிராஸ் நிர்வாகிகள் குருபிரசாத், ராஜூ, வெங்கடசுப்பிரமணியன், சுந்தரம், சின்மியாமிஷன் நிர்வாகிகள் மீனாட்சிசுந்தரம், கோபால்சாமி பங்கேற்றனர்.