உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக நாராயணன் நம்பூதிரி தேர்வு

குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக நாராயணன் நம்பூதிரி தேர்வு

பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மேல்சாந்தி (தலைமை அர்ச்சகர்) தேர்வு நடக்கிறது. ஏப்ரல் மாதம் முதல் ஆறு மாதத்துக்கான மேல்சாந்தி தேர்வு இன்று கோவில் நமஸ்காரம் மண்டபத்தில் நடந்தது. தேவஸ்தான நிர்வாக குழு தலைமையில் நடந்த நேர்முகத் தேர்வில், தகுதி பெற்ற, 35 விண்ணப்பதாரர்களின் பெயர்களை பேப்பரில் எழுதி, வெள்ளி குடத்தில் போட்டு குலுக்கல் முறையில் தேர்வு நடந்தது. இதில், நாராயணன் நம்பூதிரி மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கோவில் தந்திரி தினேசன் நம்பூதிரிப்பாடு. தற் போதைய மேல்சாந்தி கிருஷ்ணன் நம்பூதிரி, தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் கோபிநாத், நிர்வாக குழு உறுப்பினர்களான பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடு, மனோஜ், பாலகோபால், நிர்வாகி அருண்குமார் ஆகியோர் முன்னிலையில், மேல்சாந்தி தேர்வு நடந்தது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், செர்ப்புச்சேரி தெக்குபரம்பத்து மனையை சேர்ந்த நாராயணன் நம்பூதிரி, தற்போது பாலக்காடு இல்லிக்கோட்டு குறிச்சி சிவன் கோவில் மேல்சாந்தி என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !