நூக்கலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :2051 days ago
உத்திரமேரூர்:உத்திரமேரூர் நுாக்கலம்மன் கோவிலில், அரச மரத்தடி விநாயகர் மற்றும் துவாரபால முருகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, நேற்று, கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. உத்திரமேரூர், எல்.எண்டத்துார் சாலையில், பழமையான நுாக்கலம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில், அரச மரத்தடி விநாயகர் மற்றும் துவார பாலமுருகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த இரு சன்னிதிகளுக்கும், நேற்று காலை, 10:00 மணிக்கு, அதிர்வேட்டு முழங்க, மேளதாளம் ஒலிக்க, புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.தொடர்ந்து, நுாக்கலம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, பவுர்ணமியையொட்டி, நுாக்கலம்மன், ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள், அம்மனை வணங்கி சென்றனர்.