அங்காள பரமேஸ்வரி அம்மன் மாசிமக தெப்ப உற்ஸவ விழா
ADDED :2327 days ago
மானாமதுரை:மானாமதுரை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசி மக தெப்ப உற்ஸவ விழாவில் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். தாயமங்கலம் ரோட்டில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மாசி மகத்தை முன்னிட்டுஏராளமான பக்தர்கள் கோயிலிலிருந்து ஊர்வலமாக வைகை ஆற்றுக்கு சென்று அங்கிருந்துபால்குடம் எடுத்து வந்தனர்.அம்மனுக்கு பல்வேறு வகை அபிஷேகங்களும்,சிறப்புஆராதனையும் நடந்தது. மாலை அம்மன் வீதிவுலாசென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இரவு 8:00 மணிக்கு கோயிலுக்குள் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறைந்ததெப்பத்தில் உற்ஸவ விழா நடைபெற்றது.பக்தர்கள் தெப்பத்தை சுற்றி விளக்கேற்றி வழிபட்டனர்