/
கோயில்கள் செய்திகள் / புரட்டாசி கார்த்திகை; திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
புரட்டாசி கார்த்திகை; திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :8 hours ago
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 16 வகையான அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது.தொடர்ந்து கோவிலை சுற்றி சுவாமி புறப்பாடு நடந்தது.இதில் சுற்று வட்டாரங்களிலிருந்தும், வெளி மாவட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி முருகனை தரிசனம் செய்தனர்.மேலும் அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். இதைப்போலவே நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் தண்டபாணி சன்னதி, வேம்பார்பட்டி பாலமுருகன் கோயிலிலும் கார்த்திகையொட்டி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.