உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அக்கம்மாள் கோயில் கும்பாபிஷேகம்

அக்கம்மாள் கோயில் கும்பாபிஷேகம்

வடமதுரை, வடமதுரை ஒன்றியம் பி.கொசவபட்டியில் வேப்பிலைக்காரி, வேப்பிலை விநாயகர், ராஜகாளியம்மன், விஷ்ணு, பிரம்மா, சுயம்புலிங்கம், ராஜமுருகன், மூங்கிலணை காமாட்சியம்மன், ஐயப்பன், நாகம்மாள், அய்யனார், அக்கம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.நேற்றுமுன்தினம் மாலை மஞ்சள் நீர், பால், தீர்த்தக்குடம், முளைப்பாரி அழைப்புடன் துவங்கி இரண்டு கால பூஜைகள் நடந்தன. நேற்று காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்றி கும்பாபிஷேகம் நடந்தது. திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.,பட்டி காளியம்மன் கோயில் அர்ச்சகர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். சுற்று வட்டார மக்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !