உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் பவுர்ணமி: பக்தர்கள் தரிசனம்

சதுரகிரியில் பவுர்ணமி: பக்தர்கள் தரிசனம்

வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மாசி பவுர்ணமி வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை முதலே தாணிப்பாறைக்கு பக்தர்கள் வந்தனர். காலை 6:00 மணி முதல் வனத்துறையினர் சோதனைக்கு பிறகு மலையேற தொடங்கினர். கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. ராஜஅலங்காரத்தில் சுவாமிகள் காட்சியளிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். வனத்துறையினரும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !