விநாயகர் கோவில் திருவிழா கோலாகலம்
ADDED :2056 days ago
கூடலுார்:கூடலுார் சக்தி விநாயகர் கோவில், 34ம் ஆண்டு தேர்திருவிழா கடந்த, 5ம் தேதி காலை, 5:00மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, நேற்று முன்தினம், வரை தினமும் சிறப்பு பூஜைகள்; மாலை, கலை நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று, காலை விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு உத்திர நட்சத்திர வருஷாபிஷேகம், விசேஷ கும்பபூஜை, யாகபூஜை, பூர்ணாஹுதி நடந்தது. 8:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.மாலை, 6:00 மணிக்கு மேளதாள வாத்தியங்கள், தாரை தப்பட்டை, செண்டை மேளத்துடன் சக்தி விநாயகர் கோவில் திருவிழா துவங்கியது.
ஊர்வலத்தை பக்தர்கள் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.ஊர்வலம், மேல் கூடலுார் மாரியம்மன் கோவில் மைசூர் சாலை முனீஸ்வரன் கோவில், எஸ்.எஸ்., நகர் நாகராஜா கோவில் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு சென்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.