உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பன் கோவில்ஆண்டு திருவிழா

ஐயப்பன் கோவில்ஆண்டு திருவிழா

குன்னுார்:குன்னுார் அருவங்காடு ஐயப்பன் கோவிலில், கடந்த, 9ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழாவில், லலிதா சகஸ்ர நாம அர்ச்சனை, பகவதி சேவை நடந்தது.
நேற்று முன்தினம் காலையில், கணபதி ஹோமம், கலச பூஜை, தீபாராதனை, பிரசாத வினியோகம் நடந்தது. மாலையில், ஐயப்பன் திருத்தேர் பவனி துவங்கியது.ஊர்வலம், செண்டை மேள வாத்தியத்துடன், பாலாஜி நகர் ஹெத்தையம்மன் கோவில், அருவங்காடு மெயின் கேட், தொழிற்சாலை குடியிருப்பு, மாரியம்மன் கோவில் சென்றது. அங்கிருந்து தாலப்பொலி ஏந்திய மகளிர், சரண கோஷத்துடன் மீண்டும் ஐயப்பன் கோவிலை வந்தடைந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !