உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரளயகாலேஸ்வரர் கோவிலில் சுப்ரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்

பிரளயகாலேஸ்வரர் கோவிலில் சுப்ரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்

பெண்ணாடம்; பிரளயகாலேஸ்வரர் கோவில் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. 


கந்த சஷ்டி விழா கடந்த, 22ல் தொடங்கியது. கடந்த 27ம்தேதி சூரசம்ஹாரம் நடந்தது. நேற்று இரவு திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. தொடர்ந்து, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு அபி ேஷகம் செய்து சிறப்பு அலங்காரத்துடன் பூஜை செய்யப்பட்டது. இரவு 8:00 மணியளவில் கோவில் மகா மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதில், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய உற்சவருக்கு, புது பட்டாடைகள், மலர் மாலைகளால், மாப்பிள்ளை மணப்பெண் போல் அலங்காரம் செய்து, திருமாங்கல்யத்துக்கு யாக பூஜை செய்தனர். தொடர்ந்து, சுப்ரமணியர் கரத்தில், திருமாங்கல்யத்தை வைத்து பூஜித்து, தெய்வானை மற்றும் வள்ளி கழுத்தில் அணிவித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !